மணவாட்டி ஊழியம்

மணவாட்டி ஊழியம்

Monday, June 6, 2016

செய்திகளை பதிவிரக்கம் செய்துக்கொள்ள

 https://drive.google.com/folderview?id=0B9mKogGyg9jwflFQc2tDT0pFQkNsRTdXRHhKeVRhT3VpaXdxaVh5Z1M1UmtQNmFtTjR4c2s&usp=sharing

 https://drive.google.com/folderview?id=0B5I5KXZcuAmpRFdadkdlaVRfSTg&usp=sharing

https://drive.google.com/folderview?id=0B5I5KXZcuAmpTndKYm9CMGRWWW8&usp=sharing

 https://drive.google.com/folderview?id=0B5I5KXZcuAmpZlJhdHpYb1VFb2c&usp=sharing

 https://drive.google.com/folderview?id=0B5I5KXZcuAmpM0otRXFCSDRZbmc&usp=sharing

https://drive.google.com/folderview?id=0B5I5KXZcuAmpflV4WlExM19aaWtuWEFBbUtrVEw3eDE1VFdYTUFJenQ3Zlg1NndpR0l2aEE&usp=sharing

https://drive.google.com/folderview?id=0B5I5KXZcuAmpfmc5OTNtQWp1cm0wVnhTTllYeXpZcTFlTXhpVDVjRE1LX3h3VzJ6SW04Qkk&usp=sharing

 https://drive.google.com/folderview?id=0B5I5KXZcuAmpVFZSTzFhVUp6Y3M&usp=sharing

https://drive.google.com/folderview?id=0B9mKogGyg9jwaXB5OThfaG5HVkE&usp=sharing

https://drive.google.com/folderview?id=0B9mKogGyg9jwfmFiN0wyTmlxaGlGbE5vSDhQZXhzLVpmem5ycmFwLWhzRkdLcHpVVnRqOWs&usp=sharing

 https://drive.google.com/folderview?id=0B9mKogGyg9jwY01leG56dmJSa28&usp=sharing

Sunday, December 6, 2015

எபிரேயர் தமிழில்.... ஒலிநாடா 10+1=11 பகுதியும் ...... mp-3 வடிவில் மணவாட்டி ஊழியம் வெளியிடுகிறது




நன்றி:- சகோ.ஜோசப் பிரன்ஹாம், சகோ.ஜோயல் பரமானந்தம், சகோ.பிரபு மற்றும் VOICE OF GOD RECORDINGS - ஊழியத்தின் பங்குள்ள அனைவருக்கும்.

In Christ's Eternal Love

அன்புடன்,
சகோ.ஜீவஜெயம்,
மணவாட்டி ஊழியம்.

Wednesday, September 23, 2015

மீன் பிடித்தலும் ஆமையும்




நானும் எனது சகோதரனும் சிறுவர்களாயிருக்கையில், ஒரு சமயம், மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். நான் அப்பொழுது தூண்டிலில் ஒரு வயதான பெரிய ஆமையைப் பிடித்தேன். இந்த வகை ஆமை மிகுந்த வலுவுடன் தூண்டிலை இழுக்கக் கூடியது. எனவே அது என்னை ஏமாற்றிவிடாதபடி இருக்க, உடனே நான் தூண்டில் முள்ளைக் கவ்விய அதன் தலையைக் கிள்ளி ஆற்றுக் கரையில் எறிந்துவிட்டேன். என்னுடைய தம்பி அங்கே வந்து, சற்று முன்னர் நீ எதைப் பிடித்தாய்? என்று கேட்டான்.

நான், ஒரு ஆமை என்று கூறினேன்.

அதை என்ன செய்தாய்? என்று கேட்டான்.

அதை நான் அங்கே போட்டு விட்டேன். அதோ அதன் தலை அங்கே கிடக்கிறது என்று கூறினேன்.

அவன் அதனிடமாகப் போய், அது செத்துவிட்டதா? என்று கேட்டான்.

நிச்சயமாக! அதன் தலையை அதன் சரீரத்திலிருந்து வெட்டி எறிந்து விட்டேன், அது மரித்துதான் இருக்க வேண்டும் என்று நான் பதிலளித்தேன்.

எனவே, அப்பொழுது அவன் ஒரு குச்சியை எடுத்து, அந்த ஆமைத்தலையை மீண்டும் நதியில் போட்டுவிட எத்தனித்து, குச்சியை அதனருகில் கொண்டு சென்றான். அவ்வாறு அவன் செய்த பொழுது, அந்த ஆமை அக்குச்சியை கவ்வியது. இவ்வகை ஆமையானது, அதன் சரீரத்தினின்று தலையைப் பிய்த்து எறிந்து விட்டாலும், ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு அது உயிரோடிருக்கும். என் தம்பி, செத்துப் போனதாக எண்ணப்பட்ட ஆமைத்தலையானது அக்குச்சியைக் கவ்வியதைக் கண்டதும், துள்ளிக்குதித்து, ஹேய், இதென்ன அது செத்துவிட்டது என்று சொன்னாயே என்று கத்தினான்.
அது மரித்தே விட்டது என்று நான் கூறினேன்.

நல்லது, ஆமைக்கு தான் மரித்து விட்டது தெரியவில்லையா என்று பதிலளித்தான்.

அவ்விதமாகத்தான் அநேகர், தாங்கள் மரித்தவர்களாயிருந்தாலும் அதை அறிய மாட்டாதவர்களாயிருக்கிறார்கள்.


எபேசு சபையின் காலம், டிசம்பர் 5, 1960, பத்தி எண் 162-167

தேவனை தூஷித்த பெண் இரண்டு மணி நேரத்தில் மரித்தல்




ஒரு ஸ்திரீ மரணத் தருவாயிலிருந்தாள், நான் படிக்கட்டுகளில் ஓடி ஏறினேன். நான் இங்கு பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, அங்குள்ள கதவண்டையில் ஒரு மனிதன் நின்று கொண்டு என்னை அழைத்தார். அவள் வெளியே நடந்து சென்று விட்டாள் அவள் இந்த தெருவில் வசித்து வந்தாள். அவளுக்கு ஒரு பசு இருந்தது. அவள், பில்லி கடைபிடிக்கும் அவ்விதமான மார்க்கத்தை என் பசு கடைபிடித்தால், அதை நான் கொன்று போடுவேன் என்றாள். அதை கூறின பிறகு ஒரு மணி நேரத்துக்குள் அவள் வியாதிப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் அழகான இளம் பெண். நான் அங்கு விரைவாகச் சென்றேன். அவளுடைய கணவர் கத்தோலிக்கர். அவர்கள் என்னை ஆளனுப்பி அழைத்திருந்தனர். அவள் மரித்துக் கொண்டிருந்தாள்... அவளுடைய கண்கள் வீங்கி விட்டன. அவள், அவரைக் கூப்பிடுங்கள், அவரைக் கூப்பிடுங்கள்; அவரைக் கூப்பிடுங்கள்; அவரை வேகமாக, வேகமாக கூப்பிடுங்கள் என்றாள்.

அவளுடைய சகோதரன் ஓடி வந்து கதவண்டையில் நின்று கொண்டு, காத்திருந்து, காத்திருந்து, எனக்கு சைகை காட்டிக் கொண்டிருந்தார். இந்த இடம் ஜனங்களால் நிறைந்திருந்தது. சற்று கழிந்து யாரோ ஒருவர் வந்து ஒரு குறிப்பை மேசையின் மேல் வைத்தார். மருத்துவமனையில் ஒருத்தி மரித்துக் கொண்டிருக்கிறாள் என்று எழுதப்பட்டிருந்தது. அது சகோ. க்ரிம் ஸ்நெல்லிங் என்று நினைக்கிறேன். அவரிடம், நான் திரும்பி வரும் வரைக்கும் என் இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்றேன். அவர் பாடலை தொடங்கி நடத்துவதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் பிரசங்கிக்க அவர் அழைக்கப்படவில்லை. அவர் பாடலை தொடங்கி நடத்துவதற்காக வந்து கொண்டிருந்தார். நான் வெளியே சென்று, காரில் ஏறி, விரைவாக ஓட்டிச் சென்று அங்கு அடைந்தேன். நான் படிக்கட்டுகளில் ஏறிச் சென்று கொண்டிருந்த போது அவள் தன்னுடைய கடைசி மூச்சை விட்டாள். அவளுடைய குடல்களும், சிறுநீரகமும் இயங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் அவள் முகத்தை மூடிவிட்டனர். நீராவி அப்படி வந்துக் கொண்டிருந்தது. அங்கு நின்று கொண்டிருந்த வயோதிப நர்ஸ், சகோ.பிரன்ஹாமே, அவள் உங்களுக்காக அவளின் கடைசி மூச்சை விட்டாள் என்றாள். அவள் அதை நேராக்க முயன்றாள், ஆனால் அப்பொழுது மிகவும் காலதாமதமாகி விட்டது. ஒரே சமயத்தில் நீங்கள் அநேக பாவங்களைச் செய்யக் கூடும். அவள் ஒரு விதமான... அவளுடைய முகத்தில் ஆழமாக...

அவளுக்கு பொன்நிறமுள்ள தலைமயிர் இருந்தது மிகவும் அழகான பெண். கத்தரிக்கப்பட்டிருந்த அவளுடைய தலைமயிர் கலைந்து புதரைப் போல் காணப்பட்டது. அவளுடைய பெரிய பழுப்பு நிற கண்கள் வெளியே தள்ளப்பட்டு பாதி மூடியிருந்தன. அவளுடைய முகத்தில் காணப்பட்ட சுருக்கங்கள், அவள் அதிகமாக வேதனைப்பட்டதன் காரணமாக, அவளுடைய முகம் முழுவதிலும் சிறு வீக்கங்கள் போல் எழுந்து நின்றன. அவளுடைய வாய் திறந்திருந்தது. நான் அவளிடம் நடந்து சென்று அவளை உற்று நோக்கினேன். அவளுடைய கணவன் அங்கு நின்று கொண்டிருந்தார். அவர், பில்லி, நான் ஒரு கத்தோலிக்கன், அவள் பாவ விமோசன ஸ்தலத்திற்கு சென்றிருப்பதால், அவளுக்காக ஒரு ஜெபத்தை ஏறெடுங்கள் என்றார்.
நான், என்ன? என்றேன்.

அவளுக்காக ஒரு ஜெபத்தை ஏறெடுங்கள். அவள் பாவ விமோசன ஸ்தலத்தை அடைந்திருக்கிறாள். இரண்டு மணி நேரத்துக்கு முன்பு அவள் உம்முடைய சபையை கடந்து செல்லும் போது, நீர் கொண்டுள்ள அவ்விதமான மார்க்கத்தை எங்கள் பசு கொண்டிருந்தால், அதை அவள் கொன்று போடுவாள் என்று கூறினாள். அவளுக்காக ஒரு ஜெபத்தை ஏறெடுங்கள் என்றார்.

நான், இப்பொழுது காலதாமதமாகி விட்டது. அவள் வேறொரு இடத்துக்குப் போகும் வரை காத்திருக்காமல், இங்கேயே தன் ஆத்துமாவை கழுவி சுத்திகரித்திருக்க வேண்டும் என்றேன். பாருங்கள்? அது உண்மை. ஓ, ஆமாம். நமது துன்ப நேரத்திலேயே அவரை நாம் தேடுகிறோம். ஜனங்கள், தேவன் பேரில் எனக்கு விசுவாசமில்லை என்று கூறக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை அவர்களுக்கு துன்பம் உண்டாகட்டும், அவர்கள் முதலாவது கூப்பிடுவது அவரையே.


இயேசுவின் பட்சம் சேர்ந்திருத்தல், ஜூன் 1, 1962 மாலை, பத்தி எண் 263-267

மனைவியின் வளர்ப்புத் தந்தை உடனே மரித்துப்போதல்




அண்மையில் ஒருவர் இவ்வாறு கூறுவதைக் கேட்டேன்... அவர் ஒரு விதமான... அவர் ஹோப்பின் வளர்ப்பு தந்தை. அவரிடம் நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து சொல்லிக் கொண்டிருந்தேன். அவர், உன்னிடமுள்ள கூட்டத்தாரைத் தவிர வேறு யார் இதை நம்புவார்? இன்னார் இன்னார் இந்த பட்டினத்திலேயே மிகவும் மோசமான ஒரு வர்த்தகர் தாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக என்னிடம் கூறட்டும், நான் நம்புவேன் என்றார்.

நான், நீங்கள் கவலைப்படவேண்டாம். அவர் ஒருக்காலும் அப்படி கூறமாட்டார் என்றேன். அவர் தேவனற்றவராய் உடனே மரித்துப் போனார்.

நீங்கள் செய்வதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். நீங்கள் பேசுவதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள். உங்களுக்கு சுவிசேஷத்திற்கு தகுதியாயுள்ள வாழ்க்கை அவசியம். அது உண்மை!



உன் வாழ்க்கை சுவிசேஷத்திற்கு தகுதியாய் அமைந்துள்ளதா?, ஜூன் 30, 1963, பத்தி எண் 103-104

ஒரு பிசாசு துரத்தப்படுதல்




ஒரு சமயம் இங்கு ஒரு சிறு பெண் இருந்தாள். இன்றைக்கும் கூட அவள் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கலாம். அவளுடைய பெயர் நெல்லி சான்டர்ஸ். முதன்முறையாக பிசாசு துரத்தப்பட்டதை நான் கண்டிருக்கிறேன் என்றால் (நாங்கள் கல்லறைத் தோட்டத்துக்கு அப்பால் மூன்று பிளாக்குகள் தள்ளி குடியிருந்தோம்). அப்பொழுதுதான் நான் ஒரு பிரசங்கியானேன். நான் இந்த மூலையில் ஒரு கூடார கூட்டத்தில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன்.

அந்த சிறு பெண் மிகச் சிறந்த நடனக்காரி. அவள் இங்குள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள். அவளும் லீஹார்னும் (இந்த பட்டினத்திலுள்ள உங்கள் அநேகருக்கு லீஹார்னைத் தெரியும். அவன் குளிக்கும் அறை ஒன்றை நடத்தி வருகிறான்). அவளும் லீஹார்னும் நாட்டிலேயே மிகச்சிறந்த நடன ஜோடி, அவன் ஒரு கத்தோலிக்கன். அவர்களுக்கு மதம் ஒரு பொருட்டல்ல. எனவே (நெல்லியும் மற்றவர்களும்), அவள் சிறந்த நடனக்காரி, அவனும்கூட. அங்கு ப்ளாக் பாட்டம், ஜிட்டர்பர்க்ஸ் போன்ற நடனங்கள் ஆடப்பட்டன. இவர்களிருவரும் நாட்டிலேயே மிகச்சிறந்த நடனக்காரர்கள்.

ஒரு நாள் (ஒரு இரவு) அவள் தடுமாறிக்கொண்டு கூட்டத்திற்கு வந்தாள். அந்த சிறு நெல்லி பீடத்தின் முன்னால் முகங்குப்புற விழுந்தாள். தேவன் அவளை ஆசீர்வதிப்பாராக. அவள் பீடத்தின் முன்னால் விழுந்து கிடந்து, தலையை தூக்கி அழ ஆரம்பித்தாள். அவளுடைய கண்ணீர் கன்னங்களில் வழிந்தது. அவள், பில்லி என்றாள் (அவளுக்கு என்னைத் தெரியும்). அவள், நான் இரட்சிக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறேன் என்றாள்.

நான், நெல்லி, நீ இரட்சிக்கப்பட முடியும். பெண்ணே, இயேசு உன்னை ஏற்கனவே இரட்சித்து விட்டார். அவருடைய வார்த்தையின் அடிப்படையில் அதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றேன்.

அவள் அங்கு தங்கியிருந்து, அழுது, ஜெபித்து, உலக காரியங்களுக்கு மறுபடியும் செவி கொடுப்பதில்லையென்று தேவனிடம் வாக்கு கொடுத்தாள். உடனே அவளுடைய ஆத்துமாவில் ஒரு அழகான இனிமையான சமாதானம் குடிகொண்டது. அவள் எழுந்து சத்தமிட்டு, தேவனைத் துதித்து, அவரை மகிமைப்படுத்தினாள்.

அதற்குபின்பு ஆறு அல்லது எட்டு மாதங்கள் கழித்து, ஒரு இரவு அவள் ஸ்பிரிங் தெரு வழியாக வந்துகொண்டிருந்தாள்.

இப்பொழுது அவள் வாலிப பெண், அவளுக்கு அப்பொழுது சுமார் பதினெட்டு வயதிருக்கும். அவள் என்னிடம் வந்து, ஹோப்... (அது என் மனைவி. அவள் மரித்து விட்டாள்). அவள், காண்பதற்கு நான் ஹோப்பையும் ஐரீனையும் போல் இருந்திருந்தால் நலமாயிருக்கும். அவர்கள் உலக காரியங்களில் சிக்கிக்கொண்டதேயில்லை என்றாள். அவள், உலகம் நம்மேல் ஒரு அடையாளத்தை போட்டுவிடுகிறது. எனக்கு கரடுமுரடான தோற்றம் உள்ளது. நான் முகவர்ணம் தீட்டிக்கொள்வதை விட்டுவிட்டேன். ஆயினும் என் முகம் கரடுமுரடாக காணப்படுகிறது. அவர்களுடைய முகம் எவ்வளவு இளமையாகவும் களங்கமற்றதாகவும் காணப்படுகிறது! நான் அப்படி செய்யாமலிருந்தால் நலமாயிருக்கும் என்றாள்.

நான், நெல்லி, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களினின்றும் சுத்திகரிக்கிறது. தேனே, நீ சென்று விசுவாசி என்றேன்.

வேய்ன் ப்ளட்ஸ் (அவனை உங்களில் அநேகருக்கு தெரியும். அநேக ஆண்டுகளாக அவன் என் ஆப்த நண்பன்). அவன் பயங்கர குடிகாரனாயிருந்தான். என் சகோதரன் எட்வர்ட்டுடன் அவன் இங்கு வந்திருந்தான். அவன் குடித்து தெருவில் விழுந்து கிடந்த போது, அவனை நான் தூக்கிக்கோண்டு வந்தேன். ஏனெனில் போலீசார் அவனைக் கைது செய்ய முயன்றனர். அவனை இங்கு கொண்டுவந்தேன். அப்பொழுது நான் ஒரு பிரசங்கி. என் பெற்றோருடன் வசித்து வந்தேன். அது எனக்கு விவாகமாவதற்கு அநேக ஆண்டுகட்கு முன்பு. நான் அவனைக் கொண்டு வந்து படுக்கையில் கிடத்தினேன். நான் சாய்வு நாற்காலியில் உறங்கினேன். பிரன்ஹாம் குடும்பம் பெரியது என்று உங்களுக்குத் தெரியும் (நாங்கள் பத்து பேர்). எங்களுக்கு நாலு அறைகள் இருந்தன. என்னிடம் ஒரு பழைய சாய்வு நாற்காலி இருந்தது. நான் அதை இழுத்து, அதில் உறங்கினேன். குடித்திருந்த வேய்னை நான் படுக்கையில் கிடத்தினேன். அவனை வீட்டுக்குத் தூக்கிக் கொண்டுவந்து படுக்கையில் கிடத்த வேண்டியதாயிற்று. நான் அங்கு படுத்துக் கொண்டிருந்தேன்.

நான், வேய்ன், இப்படி செய்வது உனக்கு வெட்கமாயில்லையா? என்று கேட்டேன்.

அவன், உ, து, பில்லி, என்னிடம் அப்படி பேசாதே என்றான் (சகோ.பிரன்ஹாம் குடிகாரன் உளறுவதைப் போல் பேசி காண்பிக்கிறார் ஆசி). நான் அவன் மேல் என் கையைப் போட்டு, வேய்ன், உனக்காக நான் ஜெபிக்கப் போகிறான். கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக என்றேன். நான் இரட்சிக்கப்பட்டு அப்பொழுது ஏறக்குறைய ஒரு ஆண்டு காலம்தான் ஆகியிருந்தது.

அப்பொழுது திடீரென்று வாடகை காரின் கதவு திறக்கப்பட்டு வேகமாக மூடும் சத்தம் கேட்டது, யாரோ கதவை வேகமாக தட்டி, சகோ.பில், சகோ.பில் என்று கூப்பிடுவது கேட்டது (சகோ.பிரன்ஹாம் பிரசங்க பீடத்தை பதினைந்து தடவை தட்டுகிறார் ஆசி).

நான், இது என்ன, யாரோ மரித்துக்கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது என்று எண்ணினேன். நான் கதவினருகே ஓடினேன். என் பழைய துணிகளை எடுத்து, என் பைஜாமாவின் மேல் சுற்றிக்கொண்டு, வேய்னையும் போர்த்தி விட்டு, கதவினருகே ஓடினேன்.

அது பெண்ணின் குரல் போன்றிருந்தது. நான் கதவைத் திறந்த போது, இந்த வாலிபப் பெண் அங்கு நின்று கொண்டிருந்தாள். அவள், உள்ளே வரலாமா? என்று கேட்டாள்.

நான், உள்ளே வா என்று சொல்லி விளக்கைப் போட்டேன்.

அவள் அழுதுகொண்டே, ஓ, பில், பில்லி, நான் முடிந்து போனேன், நான் முடிந்துபோனேன் என்றாள்.

என்ன நேர்ந்தது, நெல்லி மாரடைப்பு ஏதாகிலும் ஏற்பட்டதா? என்று கேட்டேன்.
அவள், இல்லை, சகோ.பில். நான் ஸ்பிரிங் தெரு வழியாக வந்துகொண்டிருந்தேன். உண்மையில் சகோ.பில், உண்மையில் சகோ.பில், நான் தவறு செய்ய வேண்டுமென்று நினைக்கவேயில்லை, நான் தவறு செய்ய வேண்டுமென்று நினைக்கவேயில்லை என்றாள்.

நான், என்ன நேர்ந்தது? என்று கேட்டேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் அப்பொழுது ஒரு வாலிபன். நான் நினைத்தேன்...

அவள், ஓ, சகோ.பில், நான் சின்னாபின்னமாகிவிட்டேன் என்றாள்.

நான், அமைதியாயிரு, சகோதிரியே, நடந்ததை கூறு என்றேன்.

அவள், நான் தெருவின் வழியாக நடந்து ரெட்மென் அரங்கத்தை அடைந்தேன்... என்றாள். (அங்கு சனிக்கிழமை இரவுகளில் நடனம் நடப்பது வழக்கம்). அவள், என் உடைகளுக்காக துணி வாங்கிக்கொண்டு திரும்பும்போது, இசையைக் கேட்டேன், மேலும் அவள், உங்களுக்குத் தெரியுமா என்றாள். நான் ஒருநிமிடம் அங்கு நின்றேன். அது இனிமையாகிக் கொண்டே இருந்தது. உனக்கு தெரியுமா, நான் அங்கு நின்றால் தவறொன்றுமில்லை என்று நினைத்தேன் என்றாள்.

அங்குதான் அவள் தவறு செய்தாள் சற்று நேரம் அங்கு நின்றாள். அவள் இசையைக் கேட்டுக்கொண்டேயிருந்தாள்.

அவள், ஓ, ஆண்டவரே, உம்மை நான் நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர். நானும் லீயும் இந்த இடத்தில் நடன போட்டிகளில் எத்தனையோ விருதுகளை வென்றது என் ஞாபகத்திற்கு வருகிறது. அந்த இசை முன்பு என்னைக் கவர்வது வழக்கம். ஆனால் இப்பொழுது இல்லை என்று நினைத்தாள்.

ஓ, ஓ! ஓ, ஓ! அது உன்னைக் கவரவில்லை என்றா நினைக்கிறாய்? அது ஏற்கனவே உன்னைக் கவர்ந்து விட்டது. அவன் உன்னை நடன கூடத்திற்கு அனுப்பினதற்கு அது சமானம். பாருங்கள்?

எத்தனை பேருக்கு நெல்லி சான்டர்ஸ் தெரியும்? நல்லது, உங்கள் அனைவருக்கும் என்று நினைக்கிறேன். ஆம், நிச்சயமாக! எனவே அவர்கள்...
அவள் தொடர்நது, என்ன நேர்ந்தது தெரியுமா? நான் அரங்கத்தின் படிகளில் ஏறிச் சென்றால், ஒரு சிலருக்கு என் சாட்சியை அறிவிக்க முடியும் என்று நினைத்தேன் என்றாள்.

பார், நீ பிசாசின் எல்லைக்குள் சென்று விட்டாய், அதனின்று விலகு! பொல்லாங்கானதாய் தோன்றும் எல்லாவற்றையும் உதறித் தள்ளு!

அவளோ படிகளில் ஏறி சில நிமிடங்கள் அங்கு நின்றாள். முதலாவதாக நடந்தது என்ன தெரியுமா? சில நிமிட்களுக்குள் ஒரு பையனின் கரங்களைப் பிடித்து நடனமாடத் தொடங்கி விட்டாள்.

பின்பு அவளுக்கு சுயநினைவு வந்த போது, அங்கு நின்று, நான் நிரந்தரமாக இழக்கப்பட்டேன் என்று அழுதாள்.

அப்பொழுது நான் நினைத்தேன்: எனக்கு வேதாகமம் அதிகம் தெரியாது. ஆனால் இயேசு, என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள் என்று கூறியிருக்கிறார் என்று நினைக்கிறேன் என்று.

வேய்னுக்கும் அப்பொழுது குடிமயக்கம் சற்று தெளிந்து, அங்கு நடப்பதை உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். பாருங்கள்? நான், பிசாசே, நீ யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்பொழுது உன்னிடம் கூறுகிறேன். இவள் என் சகோதரி, இவளைப் பிடித்துக் கொண்டிருக்க உனக்கு எவ்வித உரிமையும் கிடையாது, அவள் அதை செய்ய வேண்டுமென்று நினைக்கவில்லை; அவள் ஒரு நிமிடம் அங்கு நின்றாள் (அங்குதான் அவள் தவறு செய்தாள்). அவளை விட்டு நீ வெளியே வரத்தான் வேண்டும். நான் சொல்வது கேட்கிறதா? என்றேன்.

கர்த்தர் எனக்குதவி செய்வாராக. (தேவன் நியாயாசனத்தில் உட்காருவார் என்று எனக்குத் தெரியும்). திரையிடப்பட்டிருந்த அந்த கதவு தானாகவே திறந்து மூடத் தொடங்கியது பம்பிடி, பிளம்பிடி, கா-ப்ளம்ப், கா-ப்ளம்ப், கா-ப்ளம்ப். நான் நினைத்தேன்... அவள், பில்லி, அங்கே பாருங்கள் என்றாள்.

நான், ஆமாம், அது என்ன? என்றேன்.

அவள், எனக்குத் தெரியாது என்றாள்.

நான், எனக்கும் தெரியவில்லை என்றேன்.

கதவு பம்பிடி-பம்ப், டி-பம்ப் என்று ஓசையுண்டாக்கி, திறந்து மூடிக்கொண்டிருந்தது, என்ன நேர்ந்தது? என்று நான் நினைத்தேன்.

நான் இப்படி பார்த்துவிட்டு, சாத்தானே, அவளை விட்டுப் போ; இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அவளை விட்டு வெளியே வா என்றேன்.

அப்படி நான் கூறினபோது, இவ்வளவு நீளமுள்ள ஒரு பெரிய வெளவால்; அதன் செட்டைகளிலிருந்து நீண்ட ரோமம் தொங்கிக்கொண்டிருந்தது. அது அவள் பின் பக்கத்திலிருந்து விர்ர்ர்ர் என்று வேகமாக பறந்து என்னை நோக்கி வந்தது. நான்,
ஓ, ஆண்டவராகிய தேவனே, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் இதனின்று என்னை பாதுகாப்பதாக என்றேன்.

வேய்ன் படுக்கையிலிருந்து குதித்தெழுந்து பார்த்தான். அது நீண்ட நிழலைப்போல் அங்கு சுற்றிச் சுற்றி வட்டமிட்டு படுக்கைக்குப் பின்னால் சென்றது. வேய்ன் படுக்கையை விட்டு எழுந்து வேகமாக அடுத்த அறைக்கு ஓடினான்.
நான் நெல்லியை வீட்டுக்குக் கொண்டு சென்றுவிட்டு வந்தபோது அதை காணவில்லை.

அம்மா போர்வையை உதறிப் பார்த்தார்கள். ஆனால் படுக்கையில் ஒன்றுமில்லை. அது என்ன? ஒரு பிசாசு அவளைவிட்டு வெளியேறினது. என்ன நேர்ந்தது? அவள் ஒரு வினாடி அங்கு நின்றாள். அவ்வளவுதான்.


இதுவரை  சண்டையிடப்பட்டவைகளில் மிகப்பெரிய யுத்தம், மார்ச் 11, 1962, பத்தி எண் 248-285

ஒரு குறைகூறுபவன் மேல் நியாத்தீர்ப்பு தாக்குதல்




சில நாட்களுக்கு முன்பு நியூஆல்பனியில், ஒரு பாவியுடன் நான் நின்று பேசிக்கொண்டு, அவனைக் கிறிஸ்துவினிடம் வழி நடத்திக் கொண்டிருந்த போது, மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் கொட்டகையிலுள்ள முரட்டு கையுடைய, பெரிய உருவம் படைத்த ஒருவன் அவன் என் நண்பன். அவனுடைய மருமகன் பக்கத்திலுள்ள அந்த கொட்டகையின் உரிமையாளர். அங்கு பகல் உணவு நேரத்தில், நான் ஒரு சான்ட்விச்சை தின்று கொண்டு, அவனிடம் தேவனைக் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். பகல் உணவு வேளையில், கிறிஸ்துவுக்காக ஒரு ஆத்துமாவைக் கொள்ள ஒரு இடத்தை தேடிப்பிடித்து, அங்கு நான் செல்வது வழக்கம். அந்த பாவி, திரு.பிரன்ஹாமே, என் தாய் அப்படிப்பட்ட மார்க்கத்தை இருதயத்தை உணர்த்தும் மார்க்கத்தை கடைபிடித்திருந்தார்கள் என்றான். அவன் கன்னங்களில் கண்ணீர்வடிந்து கொண்டிருந்தது.

நான், அவர்கள் மரித்து எத்தனை ஆண்டுகளாயின? என்று கேட்டேன்.

அவன், அநேக ஆண்டுகள். அவர்கள் எனக்காக எப்பொழுதும் ஜெபம் செய்து வந்தார்கள் என்றான்.

நான், அவர்களுடைய ஜெபத்திற்கு செவி கொடுத்த தேவன் இப்பொழுது பதிலளிக்கிறார் என்றேன்.

அந்த முரட்டு மனிதன் அங்கு வந்து, ஹல்லோ என்றான். அவன் குடித்திருந்தான். அவன், பில்லி கேள். நீ இந்த கொட்டகைக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் உன்னுடைய பழைய உருளும் பரிசுத்தர் மார்க்கத்தை இங்கே கொண்டு வராதே என்றான்.

நான் திரும்பி அவனைப் பார்த்தேன். கிறிஸ்து வரவேற்கப்படாத இடத்துக்கு நான் வரமாட்டேன் என்றேன்.

அப்பொழுது என் இருதயத்தில் ஒரு சத்தம். நீ எதை விதைக்கிறாயோ அதையே அறுப்பாய். உன் கழுத்தில் ஏந்திரக்கல்லை கட்டி சமுத்திரத்தின் ஆழத்திலே உன்னை அமிழ்த்துவது நலமாயிருக்கும் என்றது. அன்று பிற்பகல் அவனுடைய மருமகன், சரக்குகள் முழுவதுமாக ஏற்றியிருந்த இரண்டு டன் ஷெவர்லே லாரியை அவன் மேல் தெரியாமல் ஏற்றி, அவனைத் தரையில் கூழாக்கி விட்டான்.

பாருங்கள், நீங்கள் தேவனுக்கு மரியாதை செலுத்த வேண்டும். நீங்கள் அதை செய்தே தீர வேண்டும். தேவன் மரியாதையை அதிகாரத்துடன் கேட்கிறார்.

மரியாதை, அக்டோபர் 15, 1961, பத்தி எண் 91-97